லால் சலாம் படத்தின் முதல் நாள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

 
1

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைக்கா புரடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் நேற்று வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்தும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

கிரிக்கெட் மற்றும் இந்து-முஸ்லீம் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினிகாந்தும் நடித்ததால் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என படக்குழுவினர் எதிர்பார்த்தனர். இதனால் தமிழ் மட்டுமல்லாது பிறமொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு நேற்றே வெளியானது.

இதன்படி தெலுங்கில் டப் செய்யப்பட்ட லால் சலாம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா முழுவதும் திரையிடப்பட்டன. இந்நிலையில், தெலுங்கானாவின் சில பகுதிகளில் முதல் நாள் முதல் காட்சிக்கே கூட்டம் மிகக் குறைவாக வந்ததால் இதர காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தையும் உடனடியாக திருப்பித் தந்துள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் தெலுங்கு டப்பிங் ரூ,47 கோடி வசூலித்த நிலையில், இந்த படம் முதல்நாளே கூட்டமில்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது ரஜினி ரசிகர்களையும் படக்குழு, விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் படத்திற்கு வரவேற்பு இல்லை என்றும், பல இடங்களிலும் தியேட்டர்கள் காற்று வாங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

From Around the web