லால் சலாம் படத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ரஜினிகாந்த்..!!

வை ராஜா வை படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி வரும் இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஹீரோக்கலாக நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் மும்பை மற்றும் திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டு வந்தன. மேலும் இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த நடிக்கிறார். அவருடைய முதல் பார்வை போஸ்டர் தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலானது. லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
தற்போது லால் சலாம் படத்தில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார். இதையடுத்து படப்பிடிப்புத் தளத்தில் அவரை வாழ்த்து வழியனுப்பும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.