கதாநாயகியாக அறிமுகமாமும் படத்திலேயே பாடகியாக அவதாரம் எடுக்கும் லாஸ்லியா..!

 
லாஸ்லியா

பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று பலருடைய மனதை கவர்ந்த லாஸ்லியா மரியநேசன் தற்போது திரைப்படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார்.

இலங்கை தமிழரான லாஸ்லியா, அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அதன்மூலம் பிரபலமடைந்த அவருக்கு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்மூலம் புகழுக்கு சென்ற அவருக்கு பிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அந்த இரண்டு படங்களிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

இதில் ஃபிரெண்ட்ஷிப் படத்தின் பணிகள் முடிவடைந்தது, இறுதிக்கட்ட வேலைகள் துவங்கியுள்ளன. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை அவர் பாடியுள்ளார். அடிச்சு பறக்கவிடுமா என்று துவங்கும் இந்த பாடலுக்கு தேவாவுடன் அவர் பாடியுள்ளார். இப்பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

From Around the web