வைரலாகும் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி வீடியோ..!

 
1

பிரபல நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்…அது அனைத்து மக்களுக்கும் பெரிய சோகத்தை கொடுத்தது…

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து உயிரோடு இருக்கும்போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது…அதில் எதிர்நீச்சல் சீரியல் பிரபலத்தின் சகோதரியின் பிறந்தநாளுக்கு மாரிமுத்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்…அதுதான் இவரது கடைசி வீடியோ எனவும் சொல்லப்படுகிறது…

எத்தனையோ சினிமாக்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவிற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாகத்தான் பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி சொல்லும் அளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகர் மாரிமுத்து ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் மாரிமுத்துவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டார்.

இந்த நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அதில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் மகள் தர்ஷினி கேரக்டரில் நடித்து வரும் மோனிஷாவின் சகோதரிக்கு மாரிமுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா நான் மோனிஷாவுக்கு அப்பா என்றால் உனக்கும் அப்பாதான் என்னுடைய மகள் ஐஸ்வர்யாவை எனக்கு எவ்வளவு பிடிக்குமோ அந்த மாதிரியே உங்கள் இருவரையும் எனக்கு பிடிக்கும்.,நீங்கள் இருவரும் அதிக அளவில் உங்கள் திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும நீங்க இருவரும் பல போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கீங்க என்று கேள்விப்பட்டேன்.

அதுபோல இன்னும் பல போட்டிகளில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். அதிகமான வெற்றிகளையும் பெற வேண்டும். உனக்கு வெளிநாட்டு மோகம் அதிகமாக இருக்கு என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் நீ அதிகமான வெளிநாட்டுக்கு சென்று உன்னுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும். குத்துச்சண்டை, வாழ்வீச்சு என்று பல துறைகளில் நீயும் மோனிஷாவும் சிறந்து விளங்குகிறீர்கள்…

இனி வரும் எதிர்காலத்தில் உங்கள் துறையில் அதிகமான முன்னேற்றங்கள் நீங்கள் பெற வேண்டும்.நீ சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டு போன பிறகு நான் உன்ன பத்தி நிறைய பெருமையா பேசிக்கிட்டே இருந்தேன் அவ்வளவு ஆச்சிரியம் எனக்கு வந்தது என பெருமையாக அவர் சொல்லியுள்ளார்.

அதை போல இந்த சின்ன வயதில் இவ்வளவு தைரியமும் தன்னம்பிக்கையும் இருப்பதை பார்த்து எனக்கு சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்த உலகமே உன்னுடைய திறமையை கொண்டாட வேண்டும்…அப்படி பட்ட இளைப்பை நீங்கள் போடவேண்டும் என சொல்லி அவர் பேசியிருந்தார் இவரின் இந்த பேச்சு வைரல் ஆகி வருகிறது.

From Around the web