மறைந்த புகழ்பெற்ற  இயக்குனர் K. விஸ்வநாத்தின் மனைவி மரணம்..!! 

 
1

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் கே. விஸ்வநாத். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். உடல்நலக்குறைவால் இந்த மாத தொடக்கத்தில் கே.விஸ்வநாத்காலமானார். இந்த நிலையில் விஸ்வநாத் துணைவியார் ஜெயலக்ஷ்மியும் சற்றுமுன் காலமானார்.

50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர். இவர் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதையும் பெற்றுள்ளார். ஆறு முறை இந்திய அரசின் தேசிய விருதை வென்றவர். 8 முறை ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி இவர் மரணமடைந்தது சினிமா உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அவருடைய மனைவி ஜெயலட்சுமி இன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From Around the web