ஸ்ரீரங்கம் கோவிலில் லதா ரஜினிகாந்த் சாமி தரிசனம்..!

 
1

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்‌‌. தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

தொடர்ந்து அங்குள்ள கடைகளில் ஐந்து கிலோ எடையுள்ள அரங்கநாத பெருமாள் சுவாமி வெங்கல சிலையை லதா ரஜினிகாந்த் வாங்கினார்.

லதா ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் ஆண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு தேவையான பொருட்களையும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் அருகில் உள்ள கடைகளில் வாங்கிக் கொண்டு சென்றார் லதா ரஜினிகாந்த். 

நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு சென்றிருப்பதால் அவர் லதா ரஜினிகாந்த் உடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரவில்லை. 

From Around the web