கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் தம்பியுடன் இணைந்து நடிக்கும் லாரன்ஸ்..!!

 
1

ராகவா லாரன்ஸ் தற்போது கதிரேசன் இயக்கும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். துர்கா படமும் கைவசம் உள்ளது.

இந்நிலையில், ராகவா லாரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவருடைய தம்பி எல்வின் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். நாயகனாக எல்வினும், முக்கியக் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸும் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமாரும், லாரன்சும் முதல் தடவையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர். ஆக்‌ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. இதில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

From Around the web