லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்துக்கு தேதி குறித்த படக்குழு..!
 

 
ருத்ரன் திரைப்படம்
தயாரிப்பாளரும் இயக்குநருமான ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படத்திற்கான ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் ஜிகர்தண்டா போன்ற படங்களை தயாரித்தவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன். இவர் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘ருத்ரன்’. லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நாசர், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ருதரன் படம் வரும் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் வில்லனாக ஸ்டெண்ட் சில்வா நடிக்கிறார்.

From Around the web