‘தலைவர் 171’ தலைப்பு அறிவிப்பா?

 
1

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது என்பதும் இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ என்ற படத்தில் ரஜினிகாந்த் நடிக்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதனை அடுத்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும், ‘தலைவர் 170’ என்ற இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

LCU

இந்த நிலையில் ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இது குறித்த சந்திப்பு நடந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் சந்தித்து ‘தலைவர் 171’ படம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க இருந்த நிலையில் அந்த படம் எதிர்பாராத வகையில் டிராப்பானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினி - லோகேஷ் சந்திப்பு தமிழ் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kamal - Lokesh

இப்போது ரஜினி - லோகேஷ் கூட்டணி இணைந்தால் ஏற்கனவே லோகேஷ் ரஜினிக்காக எழுதிய கதையை எடுப்பாரா அல்லது Lokesh Cinematic Universe உடன் இணைக்கப்படுவாரா என்பது தெரியவில்லை.

From Around the web