தலைவி இரண்டாம் பாகம் கதை ரெடி- ஆனால் கங்கனா..?

 
கங்கனா ரணாவத்

தலைவி இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், கங்கனா ரணாவத் சம்மதம் கொடுத்தவுடன் படப்பிடிப்பு துவங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்கிற பெயரில் திரைப்படமாக வெளியானது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்திருந்தார்.

மொத்தம் மூன்று மொழிகளில் வெளியான இந்த படம், ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றவுடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ள விபரம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்த தகவல் வெளியிட்டுள்ள பாலிவுட் சினிமா எழுத்தாளர் ரஜத் அரோரா, தலைவி 2 படத்டிற்கான கதை விவாதங்கள் நடந்து வருகின்றன. இரண்டாம் பாகத்தில் அவருடைய அரசியல் தோல்வி, ஊழல் குற்றச்சாடு மற்றும் அதன்மீதாக அவர் நடத்திய போராட்டங்கள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
 

From Around the web