தலைவர் ரிட்டர்ன்ஸ்..!!

 
1

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தாா். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், சிறப்பு தனி விமானத்தில் செல்வதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியையும் கோரி இருந்தாா். அதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது. 

இதையடுத்து, மத்திய அரசு உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில், சென்னையிலிருந்து அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த். அவருடன், குடும்பத்தினரும் சென்றனர்.

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மருத்துவமனையின் வெளியே மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி சாலையைக் கடக்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

From Around the web