ஓ.டி.டி-யில் வெளியாகும் தலைவி..?

 
ஓ.டி.டி-யில் வெளியாகும் தலைவி..?

அரவிந்த் சாமி, கங்கனா ரணாவத் நடித்துள்ள ‘தலைவி’ படம் ஓ.டி.டியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுவதாக வெளியான செய்தி குறித்து படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் இந்தியில் தயாராகியுள்ள இந்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார் . ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ள நிலையில், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

முன்னதாக இந்த படம் வரும் 23-ம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஆனால் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா அலை காரணமாக் தேதி குறிப்பிடாமல் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தலைவி படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாவதாக செய்திகள் தெரிவிக்கின்றன்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள படக்குழு தலைவி படத்தை நிச்சயமாக முதலில் திரையரங்கில் தான் வெளியிடப்படும். அதை தொடர்ந்து ஓ.டி.டி-யில் இந்த படம் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

From Around the web