விக்ரம் படத்தில் கமலுடன் நடிக்கும் முக்கிய நடிகர்..!

 
விக்ரம்

கைதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனமீர்த்த பிரபல நடிகர், மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கைதி’ படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அவர் சொந்தமாகவும் தயாரிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல். மலையாள சினிமாவின் முக்கிய நடிகர் ஃபகத் பாசில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய்சேதுபதியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு முடியாவிட்டாலும், வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் சினிமா பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தற்போது நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web