தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்..!

 
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்..!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தை தவிர்த்து முக்கிய நடிகர்கள் நடித்து வரும் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இதனுடைய தாக்கம் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 40’, விக்ரம் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம் 60’, சிவகார்த்திகேயனின் ‘டான்’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.

எனினும் ஹைதராபாத் நகரத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் தடையின்றி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முற்றிலும் பாதுகாப்புடன் அந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதுமட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் படங்களும் இந்த வாரத்தோடு நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளில் குறிப்பிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web