பிரபல சீரியலுக்கு சுபம் போடும் முன்னணி தொலைக்காட்சி..!

 
சூர்யவம்சம் தொடர் நடிகர்கள்
பிரபல நடிகை ஒருவர் நடித்து வந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட வேகத்தில் முடிக்கப்பட்டுள்ளது தொலைக்காட்சி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழின் முன்னணி சீரியலான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் நெடுந்தொடர் ‘சூர்யவம்சம்’. தெலுங்கில் பெரியளவில் வரவேற்பு பெற்ற சீரியலில் தமிழ் ரீமேக்காக இது ஒளிப்பரப்பாகி வந்தது.

இந்த சீரியலில் பூர்ணிமா பாக்கியராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நிகிதா ராஜேஷ், ஆஷிஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். காதலுக்காக பிரிந்துபோன குடும்பம் ஒன்று சேர்வது தான் சீரியலின் கதை.

பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பான கதை நகர்வுடன் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவடையவுள்ளது. இதனுடைய கடைசி எபிசோட் வரும் 21-ம் தேதி ஒளிப்பரப்பாகவுள்ளது.

அதை தொடர்ந்து கடைசி நாள் ஷூட்டிங்கில் சீரியலில் நடித்து வந்தவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அது தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதை பார்க்கும் சீரியலின் ரசிகர்கள், தயாரிப்புக் குழு மற்றும் நடிகர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

From Around the web