இணையத்தில் லீக்..! லியோ படத்தில் நடித்தவர்களின் சம்பளம் விவரம் இது தான்..!
Oct 21, 2023, 08:05 IST

லியோ படத்தில் விஜய்க்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.
இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்த சஞ்சய் தத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் இன்னொரு வில்லனாக நடித்த ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், உள்ளிட்டவர்களுக்கு 50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் சம்பளம் எவ்வளவு என்பதை குறித்த தகவல் இல்லை என்றாலும் அவருக்கும் மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.