மொதல்ல கொஞ்சமாவது நடிக்க கத்துக்கங்க... விஜய் ஆண்டனியை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்..! 

 
1
நான், சலீம், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் ரோமியோ,

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி நடித்துள்ளார். வழக்கமாக சீரியஸான கதைகளத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி,  இதில் கலகலப்பாக  நடித்துள்ளார்.

இந்தப் படத்தை  பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருந்தார். இவர் தமிழில் வெளியாகும் திரைப்படங்களுக்கு பெரிதளவில் வரவேற்பை கொடுக்காமல் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களையே அதிகமாக கொடுத்து வருபவர்.

இதை தொடர்ந்து இன்றைய தினம் ப்ளூ சட்டை மாறனின் கதைகளை நம்பாமல் நேரில் சென்று படத்தை பாருங்கள் என விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை  பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு பதிலடி கொடுக்கும் முகமாக ப்ளூ சட்டை மாறனும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுகளை இட்டுள்ளார்.

படி அவர் கூறுகையில், தரம் தாழ்ந்த விமர்சகரும், விமர்சன விஷக்கிருமியமான ப்ளூ சட்டை மாறன் ரோமியோ விமர்சனத்தை புறக்கணித்து அலைகடலென திரண்டு ரோமியோ படம் ஓடும் திரையரங்குகளை நிரப்புங்கள் என்று விஜய் ஆண்டனி கலாய்க்கும் முகமாக பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

மேலும் சமீபத்தில் வெளியான ரத்தம், கொலை மட்டுமல்ல பல பிளாக் படங்களை தந்தவர் தான் விஜய் ஆண்டனி. அவர் இப்போது எப்படியாவது இந்த படத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம். ஆகவே முதலிரவில் மனைவி சரக்கடிக்கும் போஸ்டரை வைத்து வித்தியாசமாக பப்ளிசிட்டி செய்தார்.

ஆனாலும் மக்கள் கண்டு கொள்ளவில்லை. இப்போது விமர்சனங்களை செய்யும் விமர்சகர்களை பிராண்டி வருகிறார். அடுத்து... சக்ஸஸ் மீட் வைங்க. தமாசா இருக்கும். மொதல்ல கொஞ்சமாவது நடிக்க கத்துக்கங்க. இயக்குனர், எடிட்டர் வேலைல தலையிட்டு படத்தை காலி பண்ணாதீங்க. உங்க படம் நல்ல படம்னு மக்கள் சொல்லனும். 

அப்பறம்... தப்பு தப்பா ப்ரமோசன் ஐடியா தர்ற அல்லக்கைகளை விரட்டி விடுங்க. உங்கள மாதிரி அப்பாவிகளை அவங்க அழகா மொட்டை அடிச்சிருவாங்க. மண்ட பத்தரம்... என குறிப்பிட்டு உள்ளார்.

From Around the web