7 மாதங்களுக்கு பின் ஓடிடியில் வெளியான லெஜெண்ட் திரைப்படம்..!!
சரவணன் அருள் நடிப்பில் உருவான ஆக்சன் திரைப்படம் 'தி லெஜெண்ட்'. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடலா, கீத்திகா திவாரி, பிரபு, சுமன், நாசர், விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா, விஜயகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கும் வழக்கம்போல கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. படம் ரொமான்ஸ், சண்டை காட்சிகள் மற்றும் சென்டிமெண்ட் என கலவையாக இருந்தது. பலரும், லெஜண்ட் சரவணாவின் முயற்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 'தி லெஜெண்ட்' திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்தாண்டு ஜூலை 28ஆம் தேதி வெளியானது.
இந்த படத்திற்கு தியேட்டர் ரிலீஸை போன்று, ஓடிடி ரிலீஸ் குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனா், ஜூலை மாதம் வெளியான திரைப்படம் ஆறு மாதங்களை கடந்தும் ஓடிடி பக்கம் ஒதுங்கவில்லை.
அந்த வகையில்,'தி லெஜண்ட்' படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.திரையரங்கை போன்றே ஓடிடியிலும் இத்திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படம் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான இந்த படம் ஒடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நெம்பர் ஒன் இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இது படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது.