ஆளே மாறிப்போன அண்ணாச்சி..!! பிளாஸ்டிக் சர்ஜரி காரணமா..?
 

லெஜண்டு படத்தை தொடர்ந்து புதிய படத்தில் நடிக்க சரவணன் அருள் ஆயத்தமாகியுள்ளார். அதற்காக அவர் புதிய கெட்-அப்புடன் கூடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
 
legend saravanan

திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதை உறுதி செய்துள்ளதை அடுத்து, லெஜண்ட் சரவணன் தனது புதிய கெட்-அப் புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியம் அடையச் செய்துள்ளது.

சென்னையின் பிரபலமான வணிகர்களில் ஒருவர் சரவணன் அருள். இவருடைய சரவணனா ஸ்டோர்ஸ் கடைகள் உலகளவில் பல்வேறு நாடுகளில் உள்ளன. ஆடை அணிகலன்கள், தங்க நகைகள், வீட்டு பாத்திரக் கடை, மல்டி ஸ்டோர் என பல்வேறு வணிகத்துறைகளில் அவர் கால்பதித்துள்ளார்.

Legend saravan

அதுமட்டுமின்றி கடந்தாண்டு ஜே.டி ம்ற்றும் ஜெர்ரி இயக்கத்தில் வெளியான ‘லெஜண்டு’ என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, இந்திய சினிமாவையும் ஆட்டம் காண வைத்தார். படம் பெரியளவில் வசூல் பெறவில்லை என்றாலும், அவரது சினிமா பிரவேசம், சரவணன் அருளின் வணிக நிறுவனங்களுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.

இதனால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். எனினும், அவர் தனது அடுத்த படம் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய கெட்-அப் கொண்டு அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

legend saravanan

ஆரஞ்சு நிற கோட் சூட்டில், கொஞ்சம் எட்டிப் பார்க்கும் தாடியுடன் சரவணன் அருள் இருப்பது டிரெண்டிங்காகி உள்ளது. இப்புதிய கெட்-அப்பில் அவர் பார்க்க சற்று எடை கூடியுள்ளதாக தெரிகிறது. மேலும் முகமும் இளைஞரை போன்று உள்ளது. அதனால் சரவணன் அருள் ஜிம்முக்கு போவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதாகவும், முகத்துக்கு அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாகவும்  நெட்டிசன்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
 

From Around the web