மீண்டும் சினிமாவில் நடிக்கும் லெஜண்டு சரவணன் - என்ன படம் தெரியுமா?

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் தலைவர் லெஜண்டு சரவணன் அடுத்து நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான அப்டேட் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.
 
legend saravanan arul

சென்னையில் இருக்கும் வணிக நிறுவனங்களில் மிகவும் பிரபலமானது சரவணா ஸ்டோர்ஸ். நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் இந்த துணிக் கடைக்கு எளிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தினசரி வருகை தருகின்றனர்.

இதனுடைய தலைவரான சரவணன் அருள், தன்னுடைய நிறுவனத்துக்கான விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அவருடன் தமன்னா, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் நடித்துள்ளனர்.

இதன்மூலம் ஓரளவுக்கு ரசிகர்களை பெற்ற அவர், அடுத்ததாக திரைப்படங்களில் நடிக்க விரும்பினார். தனது நிறுவனத்துக்காக விளம்பரங்களை இயக்கிய ஜே.டி. மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்டு என்கிற படத்தில் அவர் நடித்தார்.

legend saravanan

கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி வெளியான அந்த படம், மாபெரும் தோல்வியை தழுவியது. எனினும் அந்த படம் ஹாட்ஸ்டாரில் வந்த பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் அவர் சினிமாவுக்கு திரும்பமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சரவணன் அருள் மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். தன்னை மிகவும் இளமையாக காட்டிக்கொள்ள முகத்துக்கு பல்வேறு சிகிச்சைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். விரைவில் புதிய படம் தொடர்பான கதை இறுதி செய்யப்பட்டு, வெளியீட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web