வெளிநாட்டுக்கு செல்லும் லெஜண்ட் சரவணன்- கதாநாயகி தகவல்..!

 
லெஜண்ட் சரவணன் அருள்
தொழிலதிபர் சரவணன் அருள் நடித்து வரும் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல விளம்பர பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இணைந்து இயக்கி வரும் படத்தில் சரவணா ஸ்டோர் அதிபரான லெஜெண்ட் சரவணன் அருள் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஊர்வசி ரவுதல்லா கதாநாயகியாக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத வகையில் புதிய பின்னணியுடன் சரவணன் அருள் கதாபாத்திரம் படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை ஊர்வசி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்

அதை தொடர்ந்து படப்பிடிப்பு தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டு, முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web