பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த பழம்பெரும் நடிகை..!

 
1

‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. அதனைத் தொடர்ந்து, ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திங்களில் நடித்து ரசிகர்கள் மனதை வென்றவர் விஜயலட்சுமி.

இவர் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தொடர்களிலும் நடித்து இருக்கிறார். ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 1-ல் கண்ணம்மாவின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றவர். ஆரம்பத்தில் கண்ணம்மாவை கொடுமைப்படுத்தும் கேரக்டரில் விஜயலட்சுமி அந்த சீரியலில் நடித்திருந்தார். இந்த நிலையில் அதற்கான கதை இல்லாத போது அவர் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார்.

Bharathi Kannamma

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமிக்கு நல குறைவு ஏற்பட்டு அவர் திடீரென நேற்று காலை தூக்கத்திலேயே உயிர் பிரிந்து இருக்கிறது.

சின்னத்திரை வெள்ளித்திரையில் அடிக்கடி பிரபலமானவர்கள் பலர் இப்போது அடுத்தடுத்து மரணமடைந்து வரும் வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை விஜயலட்சுமியின் மரணமும் சின்னத்திரையில் பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் பத்துக்கு மேற்பட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிலையில் சரவணன் மீனாட்சி பாரதி கண்ணம்மா போன்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

RIP

கடந்த சில மாதங்களாகவே விஜயலட்சுமி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். மேலும் சில தினங்களுக்கு முன்பு பாத்ரூமில் இருந்து வழுக்கி விழுந்ததாகவும், அதனால் தலையில் பலமாக அடிபட்டதால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்ததாகவும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் ஆகி வந்ததாகவும் தொடர்ந்து சோர்வாகவே இருந்த நிலையில் நேற்று அதிகாலையில் தூக்கத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

From Around the web