யோ படத்தின் ஆடியோ அப்டேட் இதுதான்..!!
முன்னதாக லியோ படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. அதையடுத்து ஒரேயொரு ப்ரோமோஷன் பாடல் மட்டும் இருப்பதாக கூறப்பட்டது. அதற்கான ஷூட்டிங் பணிகளும் நடத்து வந்த நிலையில், இப்பாடலில் மொத்தம் 2000 நடனக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தில் மொத்தம் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஏற்கனவே 2 பாடல்களுக்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து முடித்துவிட்டன. தற்போது அந்த பாடலுக்கான ஷூட்டிங் தான் தற்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.
இதில் தான் 2000 நடனக் கலைஞர்கள் ஆடி வருவதாக கூறப்படுகிறது. லியோ படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை நடிகர் விஜய்யின் மாமாவான ஜான் ப்ரிட்டோ தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.