மைனஸ் 12 டிகிரியில் கடுமையாக உழைக்கும் ‘லியோ’ படக்குழு..!!

 
1

பிரபல இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன்…. மைனஸ் (Minus) 12 டிகிரியில் 500 பேர் கொண்ட ‘லியோ’ (Leo) படக்குழு கடுமையாக உழைத்து என்னுடையப் பகுதியை நிறைவுச் செய்தது.

ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினார்கள். உதவி இயக்குநர்களின் ஓயாத உழைப்பும், என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சிப் பெற்ற இயக்குநராக அன்பாகவும், கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப் போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத் தழுவினான். அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துக் கொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன்.

லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


 


 

From Around the web