‘லியோ’வில் விஜய் சேதுபதி இல்லை... ஆனால் இருக்கிறார் 

 
1

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகி வருகிறது லியோ. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிரூத் இப்படத்திற்கு பின்னணி இசையை அமைத்து வருகிறார். 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. 60 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சென்னை படப்பிடிப்பை முடித்து ஐதராபாத் விமான நிலையம் மற்றும் ரமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

இதற்கிடையே ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி மறுத்துவிட்டார். இது குறித்து செய்தியாளர்கள் எழுதிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘லியோ’ படத்தில் நான் நடிக்கவில்லை. தயவு செய்து இது குறித்து வதந்திகளை பரப்பவேண்டாம் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் ‘லியோ’ படத்தில் விரைவில் நடிகர் விஜய் சேதுபதி இணைவுள்ளார். அதாவது இப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ள சஞ்சத் தத்திற்கு தமிழில் விஜய் சேதுபதி டப்பிங் பேசவுள்ளார். எப்படியாவது ‘லியோ’-ல் விஜய் சேதுபதி இணைந்தது ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web