லியோ படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா..??

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படம், ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
leo movie

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘லியோ’. விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்கி வரும் படம் என்பதால், லியோவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கதாநாயகிகளாக த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்த் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

a history of violence

இந்நிலையில் இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்த படம் இந்தியாவில் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் இந்தியாவில் குறிப்பிட்ட படம் ரீமேக் செய்யப்பட்டால், அதனுடைய ஒர்ஜினல் வெர்ஷன் தற்காலிகமாக நீக்கப்பட்டுவிடும். இது பல்வேறு படங்களுக்கு நடந்துள்ளது. அதனால், லியோ படம் ஹிஸ்ட்ரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் ரீமேக் என்கிற தகவல் உண்மைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

From Around the web