லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவு- கொதிப்பில் அஜித் ரசிகர்கள்..!!

 
leo movie

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திற்கான காஷ்மீர் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீரில் தங்களுக்கு ஷூட்டிங் நடத்த உதவிய குழுவினருக்கும் மாநில அரசாங்த்துக்கும் நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘லியோ’. தமிழக ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்தது.

தற்போது காஷ்மீரில் இந்த படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இதையொட்டி படக்குழு அனைவரும் சென்னை திரும்பிவிட்டனர். சில நாட்கள் காத்திருப்புக்கு பிறகு, சென்னை ஈ.வி.பி கார்டனில் ஷூட்டிங் துவங்குகிறது. மேலும் ஹைதராபாத் ஆர்.எஃப்.சி-யிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த தங்களுக்கு உதவிய படக்குழு மற்றும் மாநில அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்து, லியோ படக்குழு வீடியோ வெளியிட்டது. அதில் கடுமையான தட்பவெட்ப நிலை, குளிர், மலை போன்ற காலக்கட்டத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


இதை பார்க்கும் அஜித் ரசிகர்கள் பலர், இயக்குநர் மணிரத்னம் ரோஜா, தில் சே (உயிரே) மற்றும் காற்று வெளியிடை போன்ற படங்களின் பெரும்பகுதியை அவர் காஷ்மீரில் தான்எடுத்தார். அவர் படப்பிடிப்பு நடத்தும் போது, இப்போது இருக்கும் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் வசதிகள் எதுவும் அப்போது கிடையாது. 
ஆனால் இப்போது பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் காஷ்மீர் அப்டேட்டாகி விட்டது. இந்த சூழலில் படப்பிடிப்பு நடத்துவது எளிமையாகவே உள்ளது. இதற்கு வீடியோ வெளியிட்டு கொண்டாட வேண்டுமா? பல்வேறு பாலிவுட் படங்கள், தெலுங்குப் படங்களும் காஷ்மீரில் ஷூட்டிங் நடத்தியுள்ளன. அவர்கள் யாரும் இதுபோன்று தற்புகழ்ச்சி வீடியோ வெளியிடவில்லை. இது நன்றி சொல்லும் வீடியோ கிடையாது, ப்ரோமோஷன் மட்டுமே என்று சமூகவலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். 

From Around the web