லியோ படத்தில் விஜய்யுடன் தோன்றும் மிருகம்..!!
ஏற்கனவே லியோ படத்தில் கணக்கில் அடங்காத நட்சத்திரங்கள் உள்ளனர். முழுக்க முழுக்க ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்ட லியோ படம் தொடர்பாக, அவ்வப்போது புதிய செய்திகள் வந்துகொண்டே உள்ளன. இதுவரை காஷ்மீரில் நடந்து வந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் சென்னையில் நடந்தது.
இப்போது மீண்டும் மே மாதம் முதல் வாரத்தில் ‘லியோ’ படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது. அப்போது விஜய், த்ரிஷா சம்மந்தப்பட்ட பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. அத்துடன் விஜய் மற்றும் சஞ்சய் தத்துக்கான ஒரு சண்டைக் காட்சியும் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் லியோ படத்தில் ஒரு விலங்கு நடிக்கிறது. அந்த விலங்கு தான் சிங்கம். லியோ என்றாலே சிங்கம் என்று தான் பொருள். அதனால் படத்தின் முக்கியமான கட்டத்தில் சிங்கம் வரும் என்று கூறப்படுகிறது. எனினும் அந்த சிங்கம் கம்யூட்டர் கிராஃபிக்ஸில் தான் உருவாக்கப்படுகிறது.
இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்க்கும் போது, லியோ படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடியை தாண்டிவிட்டது என்கிறார்கள். அதன்படி இந்த படத்தின் முழு பட்ஜெட் ரூ. 700 கோடி முதல் ரூ. 800 கோடிக்குள் அடங்கும் என்று கூறப்படுகிறது. அதனால் படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகள் குறித்து தயாரிப்பு நிறுவனம் இப்போதே திட்டம் செய்து வருகிறது.
 - cini express.jpg)