விரைவில் வரும் லியோ பட போஸ்டர்- குறிப்பால் உணர்த்திய ரத்னகுமார்..!!

இயக்குநரும் வசனகர்த்தாவுமான  ரத்னகுமார் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் மூலமாக, லியோ படத்தின் புதிய அப்டேட் குறிப்பால் தெரியவந்துள்ளது.
 
Rathna kumar and vijay

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்து வரும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், ஒட்டுமொத்த படக்குழுவும் அங்கு தங்கியுள்ளனர்.

லியோ படத்தின் இணை திரைக்கதை எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான ரத்னகுமார், தனது இன்ஸ்டாவில் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இயக்குநர் தீரஜ் வைத்தி மற்றும் போஸ்டர் வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதன்மூலம் லியோ படத்தின் புதிய போஸ்டர் விறுவிறுப்பாக தயாராகி வருவதை ரத்னகுமார் குறிப்பால் உணர்த்தியுள்ளார். இப்படத்தின் காஷ்மீர் ஷெட்யூலில் த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி, மிஷ்கின், நரேன், மதுசூதனன் ராவ், கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அவர்களில் சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ளவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கைதி, விக்ரம் படத்தை தொடர்ந்து லியோ படத்திலும் நரேன் இணைந்துள்ளார். அதனால் இது எல்.சி.யூ திரைக்கதை அம்சத்துக்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் பணிகளை பிலோமின் ராஜூன், கலையரங்கப் பணிகளை என். சதீஷ்குமாரும் மேற்கொண்டு வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரிக்கிறார். படத்துக்கு  நடன இயக்கம் பணிகளை தினேஷூம், ஸ்டண்ட் இயக்கம் பணிகளை அன்பறிவு சகோதரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் அக்டோபர் 18-ம் தேதி ஆயுத பூஜை விடுமுறை நாட்களை முன்னிட்டு லியோ படம் திரைக்கு வருகிறது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக்கும், ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸும், சேட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் கைப்பற்றியுள்ளன. 
 

From Around the web