கிளைமேக்ஸ் ஷூட்டிங்கை நெருங்கும் லியோ..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிளைமேக்ஸை நெருங்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
leo movie crew

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் காஷ்மீரில் நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை அருகேவுள்ள ஆதித்தயராம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக விமான நிலையம் தொடர்பான காட்சிகளுக்கு வேண்டி படக்குழு ஹைதராபாத் செல்கிறது.

அங்கு நடைபெறும் படப்பிடிப்பு அர்ஜுன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படுகிறது. அதுதான் படத்துக்கான கிளைமேக்ஸ் காட்சி என்று சொல்லப்படுகிறது. இத்துடன் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவு வருவதாக கூறப்படுகிறது. 

From Around the web