விரைவில் ஒடிடியில் வெளியாகிறது லியோ ? வந்தது அசத்தல் அப்டேட் 

 
1

விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் லியோ.விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கெளதம் வாசுதேவ், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோவுக்கு, முதல் நாளில் சிறப்பான ஓபனிங் இருந்தது. ஆனால், அதன்பின்னர் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், அடுத்தடுத்த நாட்களில் லியோ வசூல் குறைய தொடங்கியது.

இந்நிலையில் லியோ திரைப்படம் வரும் 23ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து Leo on Netflix என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, ஓடிடி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே தீபாவளிக்காக லியோ ஸ்க்ரீன்கள் குறைக்கப்பட்டன. ஆனால், கார்த்தியின் ஜப்பான் பெரியளவில் சக்சஸ் ஆகவில்லை, அதேநேரம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதனால் ஜப்பானுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்க்ரீன்கள் தற்போது லியோவுக்கு கிடைத்துள்ளன. அதேநேரம் லியோ OTTயிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

From Around the web