லியோனி மகன், சஞ்சிதா நடிக்கும் படத்திற்கு அபராதம்..!

 
லியோனி மகன், சஞ்சிதா நடிக்கும் படத்திற்கு அபராதம்..!

நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்து வந்த படத்தின் படக்குழுவுக்கு அபராதம் விதித்துள்ள சம்பவம் கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தில் நடித்து பிரபலமானவர் சஞ்சிதா ஷெட்டி. தற்போது இவர் ‘அழகிய கண்ணே’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனியின் மகன் லியோ சிவகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தினசரி அங்கு நடத்தப்பட்டு வரும் ஷூட்டிங்கை பார்க்க நூற்றுக்கும் அதிகமானோர் கூடுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளனர்.

கொரோனா நடவடிக்கைகளை சரிவர பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு தடுப்பு பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதை தொடர்ந்து மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் சென்னைக்கு திரும்பிச் சென்றனர். 

From Around the web