ஆரம்பிக்கலாமா..! மீண்டும் இணையும் ஏஜிஎஸ் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணி..!
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 26வது படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து என்ற அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் ஏற்கனவே ’ஓ மை கடவுளே’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘லவ் டுடே’ என்ற வெற்றி படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் ’ஓ மை கடவுளே’என்ற வெற்றி படத்தை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைவதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அதில் பிரதிப் ரங்கநாதன் ஸ்டைலாக உள்ளதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தை தயாரித்து வரும் நிலையில் அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியேற்றுவதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ’எல்ஐசி’ திரைப்படத்தில் நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் அந்த படத்தை முடித்தவுடன் அஸ்வத் மாரிமுத்து படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.