எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள்.. அது எந்த அளவிற்கு உண்மை என்பது அனுபவிக்கும்போதுதான் புரியும் - நீலிமா ராணி..!

 
1

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி.. இதற்கு பிறகு டிவி சீரியலுக்குள் நுழைந்து, பல தொடர்களில் நடித்தார்..


இவர் மகளிர் தினத்தை முன்னிட்டு அக்னி சிறகே என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகள் மத்தியில் தனது வாழ்க்கை குறித்தான பல சுவாரசியமான சம்பவங்களையும், சோதனைகளையும் பட்ட கஷ்டங்களையும் குறித்து பேசி அந்த மாணவிகளை மோட்டிவேட் செய்துள்ளார்.


"என்னுடைய 21 வயதில் இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். திருமணம் முடிந்த 6 மாதத்தில் என்னுடைய தந்தை இறந்துவிட்டார். அந்த இழப்பிலிருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை. இதற்காக நான் நிறைய கோயில்களுக்கு சென்றேன், நிறைய புத்தகங்களையும் படித்தேன்.. இதைத்தவிர பல்வேறு விஷயத்தில் கவனத்தை செலுத்தி, பிறகு மெல்ல அதிலிருந்து வெளியே வந்தேன்..

கடந்த 2017ல், நானும், என்னுடைய கணவரும் சேர்ந்து 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுக்க முடிவு செய்தோம்.. இதற்காக வெளியில் வட்டிக்கு பணம் வாங்கி, படத்தை தயாரித்தோம். ஆனால், அந்த படம் நினைத்த மாதிரி சரியாக வரவில்லை. கடைசியில் அந்த படத்தை குப்பையில் தான் போட்டோம். கடன் வாங்கி நடுத்தெருவில் நின்றோம். அன்று நானும் என் கணவரும் சரி இழந்தாச்சு, ரோட்டுக்கு வந்தாச்சு இனி இங்கிருந்து எப்படி நகர போகிறோம் என்று யோசித்தோம்.அந்த சமயத்தில் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தேன். வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் போன்ற தொடர்களில் நடிக்க துவங்கினேன்.. வாடகை வீட்டுக்குகூட போக முடியாமல, என் கணவரின் நண்பர் வீட்டில் ஒரு அறையில் எங்கள் பொருட்களை வைத்துக் கொண்டு அங்கு தான் தங்கியிருந்தோம்.


எங்களுடைய குறிக்கோள் வெற்றி பெற வேண்டும் என்று இருந்ததால், தோல்வியையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தோம். அதனால்தான், மீண்டும் அந்த இடத்தை எங்களால் அடைய முடிந்தது.என்னுடைய குறிக்கோள் சினிமா தயாரிப்பதாக இருந்தாலும், சீரியலையே முதலில் தயாரித்தோம்.. எனினும், கண்டிப்பாக ஒருநாள் படம் தயாரிப்போம். எனவே, நாம் சோர்ந்து போய் உட்கார்ந்தால் யாரும் நமக்கு கை கொடுக்க வரமாட்டார்கள். நமக்கு நாமே தான் கை கொடுத்து உதவிக்கொள்ள வேண்டும்.


எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள்.. அது எந்த அளவிற்கு உண்மை என்பது, சொந்தமாக அனுபவிக்கும்போதுதான் புரியும்.. எனவே, நீங்கள் என்னவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். செல்போனை கையில் வைத்து கொண்டு ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தால், நேரம் தான் செலவாகுமே தவிர, சுயமாக எதையுமே நம்மால் சிந்திக்க முடியாது. இதனால் செல்போனை தவிர்த்து விட்டு உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்" என்று மாணவிகளக்கு அறிவுரை வழங்கினார் நீலிமா ராணி.

From Around the web