ஓ.டி.டியில் வெளியாகும் பிக்பாஸ் கவனின் லிஃப்ட்..!

 
லிஃப்ட் திரைப்படம்

எதிர்பார்த்து வந்ததை போல பிக்பாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘லிஃப்ட்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில் சினிமாவில் நடிகராக மாறிய நடிகர்களில் ஒருவர் கவின். இவர் முதன்முதலாக ஹீரோவாக நடித்த ‘நட்புனா என்னனு தெரியுமா’ என்கிற படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது.

அதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்மூலம் அவருக்கான ரசிகர் வட்டம் அதிகரித்தது. அதை தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவின் கவனம் செலுத்தினார்.

இதன்மூலம் அவருக்கு கிடைத்த படம் தான் லிஃப்ட். கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை வினீத் வரபிரசாத் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல் வெளியாகிவிட்டன. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய ஒரு பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் லிஃப்ட் படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
 

From Around the web