மின்னல் முரளி ஓ.டி.டி ரிலீஸ் உறுதி..!

 
மின்னல் முரளி

டோவினா தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸை படக்குழு உறுதி செய்து, ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலும் ஹாலிவுட்டுக்கு இணையாக சூப்பர் ஹீரோ படங்கள் தயாரிக்கப்படுவதுண்டு. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹீரோ படங்கள் வெளிவருவதுண்டு. உலகளவில் வரவேற்பு பெற்ற பாகுபலி கூட ஒரு சூப்பர்ஹீரோ படம் என்கிற கருத்தை சில திரை ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

அந்த வரிசையில் மலையாள மொழியிலும் உருவாகியுள்ள மின்னல் முரளி திரைப்படமும் இணைந்துள்ளது. சாமானிய மக்களின் வாழ்வியோலோடு தொடர்புப்படுத்தி இந்த சூப்பர்ஹீரோ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் டீசர் வெளியான போது, இதை உணர முடிந்தது.

அதனாலேயே இந்த படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா காரணமாக படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மின்னல் முரளி படம் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேசியளவில் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளதால், உகந்த தேதியில் இந்த படத்தை வெளியிட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரைவில் அதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web