அதற்குள் முதற்கட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்ட லிங்குசாமி- அசந்து போன திரையுலகம்..!

 
லிங்குசாமி மற்றும் ராம் பொத்தினேனி
லிங்குசாமி இயக்கத்தில் துவங்கப்பட்ட புதிய படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு உடனே முடிக்கப்பட்டுள்ளது தெலுங்கு திரையுலகத்தை ஆச்சரியமடையச் செய்துள்ளது.

தமிழில் சரிவர வாய்ப்புகள் அமையததால் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்த படத்தை சீனிவாச சில்வர் ஸ்கிரீன் என்கிற முன்னணி நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த ஜூலை 13-ம் தேதி ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதையடுத்து படத்திற்கான முதற்கட்ட ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு சினிமா உலகம் லிங்குசாமி மீது ஆச்சரியம் அடைந்துள்ளது.

தெலுங்கில் பொதுவாக ஒரு படம் முடிவடைய குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும். முதல் ஷெட்யூல் முடிவடையை குறைந்தது 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும். ஆனால் இயக்குநர் லிங்குசாமி படத்தின் முதல் ஷெட்யூல் ஒரு மாத கால இடைவெளியில் முடிக்கப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அதிரடி கமர்ஷியல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, முதல் ஷெட்யூலில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடிவடைந்து விட்டதாம். டப்பிங் மட்டுமே பாக்கி. இது டாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு மேலும் தலை சுற்றலை அளித்துள்ளது.

From Around the web