லிங்குசாமி படத்தின் வில்லன் நடிகர் அறிவிப்பு..!

 
இயக்குநர் லிங்குசாமி மற்றும் படக்குழுவினர்

தெலுங்கில் ராம்பொத்தேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ள லிங்குசாமி, அந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தமிழ் நடிகரை ஒப்பந்தம் செய்துள்ள விபரம் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி இயக்குநரான லிங்குசாமி, அஞ்சான் பட தோல்விக்கு பிறகு சில ஆண்டுகள் படங்களை ஏதும் இயக்காமல் இருந்தார். அதை தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவல் படத்தை அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குவதாக அறிவித்தார்.

ஆனால் அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது. தற்போது முழுக்க முழுக்க தெலுங்குப் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் ராம்பொத்தேனி என்கிற தெலுங்கு நடிகர் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். நேரடியாக தெலுங்கில் தயாரானாலும் இப்படம் தமிழிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றவாறு படத்தில் வில்லனாக ஆர்யா நடிக்கலாம் என்று கூறப்பட்டது.

இதன்மூலம் தெலுங்குடன் தமிழ் மார்கெட்டுக்கும் வியாபாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்யாவுக்கு மாற்றாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆதியை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளார் லிங்குசாமி.

நடிகர் ஆதிக்கு தமிழை விட தெலுங்கில் மார்கெட் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்படம் தெலுங்குடன் தமிழிலும் உருவாக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

From Around the web