சின்னத்திரை நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வந்தவர் வெங்கட் சுபா. இவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குடும்பத்தார் தெரிவித்துள்ளார். யூ-ட்யூப் சேனலில் சினிமா விமர்சனங்களில் ஈடுபட்டு வந்ததன் மூலம் இவர் வலைதள ரசிகர்களிடம் நன்கு பிரபலமானார்.
மேலும் வெங்கட சுபா அழகிய தீயே, கண்ட நாள் முதல், மொழி உள்ளிட்ட படங்களிலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். அவருடைய மறைவுக்கு திரையுலகத்தினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் கூறி வருகின்றனர்.