லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன் ரொமான்ஸ் பண்ணும் ‘இனிமேல்’ டீஸர் வெளியானது..!!

 
1

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தற்போது ரஜினியின் அடுத்த படத்திற்கான பணிகளில் செம பிசியாக இருந்து வருகிறார் .

இதற்கிடையில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் கேட்டுக்கொண்டதால் காரணமாக அவர்களுடன் சேர்ந்து ஒரு ஆல்பம் பாடலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

“இனிமேல்” என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலுக்கு கமல்ஹாசனின் அன்பு மகளான ஸ்ருதிஹாசன் தான் இசையமைத்து இருக்கிறார். இந்த பாடலின் வரிகளை உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி இருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் அதீத ஆர்வத்தை தூண்டியுள்ள இந்த கூட்டணியின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இந்த ஆல்பம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அந்த அப்டேட் என்னவென்றால் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகி இருக்கும் இந்த பாடலின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த டீசரில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் சேர்ந்து செய்திருக்கும் ரொமான்ஸ் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி உள்ளது.

இதற்கு முன் இந்த மாறி லோகேஷை நங்கள் பார்த்ததே இல்லை என லோகேஷின் ரசிகர்கள் தற்போது கமெண்டில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 


 

From Around the web