லியோ படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!!

சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படம் குறித்து பரபரப்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
 
lokesh kanagaraj

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இதுவரை படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ளது. அங்கு விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், நரேன் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. 

இவ்வார இறுதியில் லியோ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்படவுள்ளது. அதற்கான பணிகளில் படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் லியோ படத்தின் கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், லியோ படம் முழுக்க முழுக்க அதிரடியான கதையாகும். இதுவரை நடத்தப்பட்ட படப்பிடிப்பு பணிகள் சிறப்பாக வந்துள்ளன. 


இதுவரை காஷ்மீரில் 60 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளன. இன்னும் 60 நாட்கள் ஷூட்டிங் பாக்கியுள்ளன. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளன என்று கூறினார். அவர் கூறியவுடன் அரங்கமே தைதட்டியது. வரும் புதன் முதல் லியோ ஷூட்டிங் சென்னையில் துவங்குகிறது.

அதை தொடர்ந்து படக்குழு ஹைதராபாத் விரைகிறது. அங்கு அர்ஜுன், ப்ரியா ஆனந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. அத்துடன் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கப்படுகிறது. அதையடுத்து லியோ படம் வரும் செப்டம்பர் 19-ம் தெதி வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web