எனது தயாரிப்பு நிறுவனம் இளம் இயக்குநர்களுக்காகவே - லோகேஷ் கனகராஜ்..!

 
1

உறியடி’ புகழ் விஜய்குமார் நடிக்கும் புதிய படம் ‘ஃபைட் கிளப்’ (Fight Club). இந்தப் படத்தை அப்பாஸ் ரஹ்மத் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் தனது ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “விஜய்குமார் சினிமாவை நேசிப்பவர். இந்தப் படத்தை என்னுடைய கம்பெனி மூலமாக ரிலீஸ் செய்வது, நான் அவர்களுக்கு செய்யும் நல்லதல்ல. மாறாக, எனக்கு நானே செய்யும் நல்லது.

இந்தப் படத்தில் ஒரு சின்சியாரிட்டி இருப்பதாக உணர்கிறேன். இளம் நடிகர்கள் பலரையும் படத்தில் காண முடிந்தது. நான் விஜய்குமாரிடம் கூட ‘உன்னைத் தாண்டி நிறைய பேர் படத்தில் தெரிகிறார்கள்’ என்று சொன்னேன். படம் வெளியான பிறகு பேசப்படுவார்கள். படத்தை சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமாக இருந்தது.

என்னுடைய இந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) ஆரம்பித்தது ஃபேஷனுக்காக இல்லை. நான்கு, ஐந்து படங்களை இயக்கியதும் உடனே ஒரு தயாரிப்பாளராக வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கவில்லை. மக்கள் கொடுத்த அங்கீகாரத்தினால் இயக்குநராக நான் வாங்கும் சம்பளமே போதும் என்ற நிலையில் இருக்கிறேன். அதன் பிறகு ஏன் இந்த நிறுவனம் என்றால், 2012, 2023 அந்த காலக்கட்டத்தில் குறும்பட இயக்கி அதன் மூலம் தயாரிப்பாளரை அணுகலாம் என நினைத்துக் கொண்டிருந்தோம்.

அப்போது எனக்கு உதவியது என்னுடைய நண்பர்கள்தான். அதன் மூலமாக எனக்கு கிடைத்தது தான் ‘மாநகரம்’ திரைப்படம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் என்னை நம்பியதால் தான் அந்தப் படம் உருவானது. அதேபோல நான் நான்கு பேருக்கு உதவ வேண்டும் என நினைக்கிறேன். புதிய இயக்குநர்களை கண்டறிந்து அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதுதான் ஐடியா. படம் நன்றாக இருந்தால் வரவேற்பு தாருங்கள்” என்றார்.

முன்னதாக, நடிகர் விஜய்குமார் பேசுகையில், “இந்தப் படத்துக்கு அழுத்தமான டைட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். இது டேவிட் ஃபின்சரின் கல்ட் க்ளாஸிக் படத்தின் டைட்டில். அந்தப் படத்தின் கதையும் இந்தப் படத்தின் கதையும் வேறு. அந்தப் பெயரை நாம் கெடுத்துவிட மாட்டோம் என நினைத்து நம்பிக்கையாக இந்த டைட்டில் வைத்தோம்.020-ல் படத்தை தொடங்கினோம். 3 வருடமாக நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டோம். இயக்குநர் அப்பாஸ் கடுமையாக உழைத்தார். நல்ல படம் அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதன்படி நிறைய சிரமங்களுக்குப் பிறகு படத்தை பார்த்த போது, அவுட்புட் நன்றாக வந்துள்ளது. லோகேஷ் கனகராஜூக்கு படத்தை போட்டுக்காட்டி இப்போது இங்கே வந்து நிற்கிறோம்” என்றார்.

From Around the web