லோகேஷ் கனகராஜ் படம் தான் ரஜினிக்கு கடைசி: மிஷ்கின் தகவல்..!!

லியோ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக நடிகரும் இயக்குநருமான மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
 
 
lokesh

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லியோ. இந்த் படத்தை முடித்து பல்வேறு நிறுவனங்களுக்கு லோகேஷ் கனகராஜ் படங்கள் இயக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களும் அதில் அடங்கும்.

அத்துடன் தமிழில் கைதி 2, விக்ரம் 2 ஆகிஅ படங்களையும் அவர் இயக்க வேண்டியது உள்ளது. இப்படங்கள் அனைத்தும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று தான். ஆனால் அண்மையில் வெளியான பேட்டியில் இயக்குநர் லோகேஷ் குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் இயக்குநர் லோகேஷ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் தன்னை வைத்து ஒரு படம் இயக்க ரஜினி கேட்டுக்கொண்டுள்ளார். அந்த படம் சினிமாவில் தான் நடிக்கும் கடசிப் படமாக இருக்க வேண்டும் என்று லோகேஷிடம் ரஜினி கூறியதாக சொல்லப்படுகிறது.

mysskin

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் தனது நேர்காணலில், லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்துக்காக படம் இயக்கவுள்ளார். வரிசையாக பல நிறுவனங்களுடன் அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார். எனினும் அவர் ரஜினிக்கு தான் அடுத்து படம் இயக்கவுள்ளார். இது சினிமாவில் ரஜினி நடிக்கும் கடைசிப் படமாக அமையவுள்ளது என்று கூறினார்.

ரஜினிகாந்த் தற்போது தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் மும்பையில் நடந்து வருகிறது. இது ரஜினிகாந்தின் 169-வது படமாகும். அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் இயக்குநராக  த.ச. ஞானவேல் கமிட்டாகியுள்ளார். இது ரஜினிகாந்தின் 170-வது படமாக தயாராகவுள்ளது. இப்படங்களுக்கு பிறகு தான் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இது ரஜினிகாந்தின் 171-வது படமாக தயாராகவுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

From Around the web