ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை சொல்லிய லோகேஷ் கனகராஜ்..!
அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ளது லியோ.இது LCU வாக தான் இருக்கும் என சொல்லவும் படுகிறது அப்படி ஒரு டிமாண்ட் இந்த படத்திற்கு இருக்கிறது.
தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள இந்த படம் குறித்த அப்டேட் அடிக்கடி வெளியாகி வருகிறது…கடந்த 5ஆம் தேதி வெறித்தனமான ட்ரைலர் கூட வந்து வைரல் ஆகியிருந்தது…
இதுவரை அனைத்து மொழிகளிலும் 50 மில்லியன் பார்வையாளர்களை லியோ படத்தின் டிரைலர் கடந்துவிட்டது அதுவே ஒரு பெரிய ரெகார்ட் என்று தான் சொல்லவேண்டும்…இந்த டிரைலர் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று முதல் லோகேஷ் இண்ட்டர்வியூ கொடுக்க ஆரம்பிடித்துள்ளார்,அதன்படி சமீபத்தில் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷ் கனகராஜ்க்கும் விஜய் இடையே சண்டை ஏற்பட்டது என்று சில தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியானது…அதை பற்றி அவர் சொல்லியுள்ளார்…
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய லோகேஷ் கனகராஜ் எனக்கும் அவருக்கும் சண்டை என்று செய்தி வந்தது. அந்த சமயத்தில் நான் அவருடன் தான் இருந்தேன்.,அதை பார்த்து நாங்கள் இருவரும் சிரித்து கொண்டு இருந்தோம் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்…எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க அப்படின்னு சொன்னாரு.. மாஸ்டர் படத்திலிருந்து அண்ணா என உரிமையுடன் நடிகர் விஜய் மட்டும் தான் கூறி வருகிறேன். அந்த அளவுக்கு உரிமைக் கொடுத்துள்ள நபர் அவர் மட்டும்தான் என பேசி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.
அவர் என்னுடைய அண்ணன் தான் எனவும் நாங்கள் கிரிக்கெட் இணைந்து விளையாடுவோம் என்றும் அவர் சொல்லியுளளார்..இந்த தகவல் வைரல் ஆகி வருகிறது..
70 ஆயிரம் ரெக்வஸ்ட் வந்துடுச்சு, கண்டிப்பாக அடியோ லான்ச் நடத்தினால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்டதை போல ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் என நினைத்து தான் வேண்டாம் என்கிற முடிவை விஜய் அண்ணா மற்றும் லியோ படக்குழுவினர் ஒன்றாக சேர்ந்து எடுத்தோம் என்றும் அதற்கும் விளக்கம் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.