விரைவில் எல்.சி.யூ-வில் இருந்து வெளியேறிட லோகேஷ் முடிவு...!!
லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் என்கிற எல்.சி.யூ-வில் இருந்து இனி 10 படங்களை எடுத்திவிட்டு, அந்த கதையமைப்பை முடித்துக்கொள்ளவுள்ளேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த பட குறித்தி பேட்டியொன்றில் குறிப்பிட்டு பேசிய லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் நம்பிக்கையால் தான் எல்.சி.யூ கான்செப்ட் சாத்தியமானது. இதுபோன்ற கதையை இயக்குவது என்பது அவ்வளவு எளிதானது கிடையாது.
தயாரிப்பாளர் தரப்பில் இருந்து என்.ஓ.சி வாங்க வேண்டும், அதற்கு நடிகர்கள் தரப்பில் சம்மதம் கூற வேண்டும் என்று நிறைய பிரச்னைகள் உண்டு. அவை அனைத்தையும் சாத்தியமாக்கி தந்த தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு நன்றி.
அதன் காரணமாக இந்த யூனிவெர்ஸில் இருந்து படங்கள் உருவாவதற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் ஒரு பத்து படங்களை இயக்கிவிட்டு அதிலிருந்து வெளியறிவிட முடிவு செய்துள்ளேன்.அப்போது தான் அது சரியாக இருக்கும் என்பது என் கருத்து.
மீண்டும் லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இன்னும் அவருடன் 10 நாட்கள் தான் படப்பிடிப்பு உள்ளது. அதற்கு பிறகு சில நடிகர்களுடம் தனித்தனியாக ஷூட்டிங் நடைபெறும். அவரை மிஸ் செய்வது சற்று கஷ்டமாகத்தான் உள்ளது.
என்னிடம் பேசும் பலரும் லியோ படம் எல்.சி.யூ கதைக்குள் வருமா என்று கேட்கின்றனர். அதை தெரிந்துகொள்ள குறைந்தது 3 மாதங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டியில் குறிப்பிட்டார்.
 - cini express.jpg)