பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கொடுத்த லியோ அப்டேட் இதுதான்..!!

தமிழின் முன்னணி இயக்குநராக உருவாகியுள்ள லோகேஷ் கனகராஜ் இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து #HBDLokesh என்கிற ஹேஷ்டேக் சிறிது நேரம் ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது. தற்போது விஜய், த்ரிஷா நடித்து வரும் லியோ படப்பிடிப்புக்காக காஷ்மீரில் உள்ளார் லோகேஷ். அதையொட்டி அவருடைன் ஷூட்டிங் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் லியோ படத்தின் புதிய கெட்-அப்பில் இருக்கும் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், எல்லாவற்றுக்கும் நன்றி விஜய் அண்ணா என்று பதிவிட்டு ஹார்டின் பறக்கவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் விஜய்யின் கெட்-அப் பலரையும் கவர்ந்துள்ளது.
Thanx a lot @actorvijay na for everything ❤️ pic.twitter.com/iSc31Xs9q1
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 14, 2023
எனினும், இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் என்பதால் பலரும் லியோ படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வெறும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, பிறந்தநாளை முடித்துக்கொண்டார். இது ரசிகர்கள் பலருக்கும் சிறியளவில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.