பிரபாஸ் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..!

 
பிரபாஸ் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..!

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு லோகேஷ் கனகராஜிடன் தயாரிப்புக் குழு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபாலி 1 மற்றும் 2 மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன. ஹாலிவுட் பிரபலங்கள் பலர் அமெரிக்க ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பேசும் அளவுக்கு இந்த படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இதன்மூலம் பிரபாஸ் பான் இந்திய நடிகராக மாறிவிட்டார். தற்போது அவர் நடித்து வரும் பல்வேறு படங்கள் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் ஒருசேர தயாரிக்கப்படுகிறது. இது இந்தியாவில் எந்தவொரு ஹீரோவுக்கும் கிடைக்காத வாய்ப்பாகும்.

அதை தொடர்ந்து ஒவ்வொரு மொழியில் பிரபலமாக இருக்கும் இயக்குநர்களின் படங்களில் நடிக்க பிரபாஸ் முடிவு செய்துள்ளார். அதன்படி கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் ரீல் இயக்கி வரும் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

அந்த வரிசையில் தமிழில் டிரெண்டிங் இயக்குநராகவுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க பிரபாஸுக்கு விருப்பது ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை அவர் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை பிரபாஸ் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி உறுதியானால், அடுத்த வருடம் மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குள் கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தின் ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் செய்துவிட லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார்

From Around the web