நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் கதையை ஊக்குவிக்க தயாரிப்பாளரானார் லோகேஷ் கனகராஜ்!
 

 
1

'மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தற்போது ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்து இருக்கிறார்.

’ஜி ஸ்குவாட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தயாரிப்பு நிறுவனம் குறித்து அவர் பகிர்ந்திருப்பதாவது, ‘ஐந்து படங்களை இயக்கிய பிறகு ‘ஜி ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதில் மகிழ்ச்சி. ஆரம்பத்தில் எனது நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் கதையை எடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்க உள்ளேன். விரைவில் அப்டேட் வரும். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


 


 

From Around the web