கமலுக்காக சட்டையைக் கிழக்கும் அளவுக்கு போன கவுதம், லோகேஷ்..!!

கமல்ஹாசனின் சிறந்த ரசிகராக தனக்கு கவுதம் மேனன் தான் தெரிவதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட, அதனால் கவுதம் மேனன் மற்றும் லோகேஷுக்கு இடையில் செல்லமாக ட்விட்டர் யுத்தம் நடந்தது.
 
lokesh

கடந்த சில மாதங்களுக்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ”கமல்ஹாசனை தன்னால் விட்டுக்கொடுக்க முடியாது. அவருடைய ரசிகராக நான் தான் முதல் ஆளாக இருப்பேன். அதற்கு யார் போட்டிக்கு வந்தாலும், சட்டையைக் கிழித்துக் கொண்டு சண்டைக்கு நிற்பேன்.” என்று பேசினார்.

இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் கமல்ஹாசனின் முதல்நிலை சிஷயனாக லோகேஷை நியமித்து, அவருக்கு ஆதரவு திரட்டி வந்தனர். இதற்கிடையில் 2006-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.

இதற்கு ரசிகர்களிடையே ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. அதை தொடர்ந்து கமல்ஹாசனின் முதல்நிலை ரசிகர் கவுதம் மேனன் தான் என்று பலரும் சமூகவலைதளங்களில் பொங்க ஆரம்பித்துவிட்டனர். இது லோகேஷ் கனகராஜ் ஃபோலோயர்ஸுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்த, அவர்கள் ஒருபக்கம் கொதித்தெழுந்தனர். 


அப்போது தான் ரசிகர் ஒருவர், கமலின் தீவிர ரசிகர் யார் என்ற சண்டையில் முதலிடம் பிடித்தது கவுதம் வாசுதேவ் மேனன்தான் என தோன்றுகிறது. சாரி லோகேஷ் கனகராஜ் என்று பதிவிட்டார். இதற்கு பதிலளித்த லோகேஷ், சந்தேகமே வேண்டாம். கவுதம் மேனன் தான் முதலிடம் என்று கூறினார். 

உடனடியாக அதை ரீட்வீட் செய்த இயக்குநர் கவுதம், லோகேஷ் கனகராஜ் வரும் வரை அப்படி இருந்தது. ஆனால் விக்ரம் படம் வந்த பிறகு அதுதான் முதலிடம்.  எனினும் அதை த்ஹாண்ட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். ஆனால் இந்த சண்டையால் சட்டைக் கிழியாது என்று கூறி பதிவிட்டார்.

From Around the web