லொள்ளு சபா நடிகர் சேஷூ காலமானார்..!

 
1

 'லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சேசு. இவர், சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கியிருப்பார். சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்திலும் இவர் நடித்திருப்பார். 

பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை காமெடியாக மாற்றி லொள்ளு சபாவில் கலாய்த்திருப்பார்கள். அதில் காந்திமதி நடித்த ஓச்சாயி கிழவி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சேஷு. இதன் மூலமும் அவர் பிரபலமானார்.அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி எந்ற படத்திலும் இவரது நடிப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் 2ஆம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி படம் வெளியானது. இந்த படத்தில் சேசு காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. சேசுவின் கோவில் பூசாரி கதாப்பாத்திரமும் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது. நடிகர் சேசு, அடுத்து சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் ‘நான் தான் கிங்கு’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சேஷுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானார்.இவரின் மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

From Around the web